Tuesday, June 30, 2009

ரயில் பயணங்களில்

உனக்கான நினைவுகளை என்னுள்ளே சுமந்து கொண்டு இதோ தனிமையான ரயில் பயணத்தில் நான்........
என்னை கடக்கும் மரங்கள் உனது நினைவுகளை என்னுளே இருந்து திசை திருப்ப பார்கின்றன.நான் கேட்கும் பாடல்கள் உனக்காக நான் எழுதும் இவ்வரிகளை தடுக்க முடியாமல் தவிக்கின்றன.ரயில் நிலையங்களை கூட கவனியாமல் உனக்கான மன்னிக்கவும் எனக்கான உன் நினைவுகளை என்னுள்ளே ஓட விட்டு கொண்டிருக்கிறேன்.
உனது நினைவுகள் எவ்வளவு சுவாரசியாமானவை உன்னை பற்றி ஏதும் அறியாத நானும் எனது எண்ணங்களும் நீ எவ்வாறெல்லாம் இருப்பாய் என அசை போட்டு கொண்டிருக்கின்றன.
உனக்கெதெல்லாம் பிடிக்கும்? உனது ஆசைகள் என்னவாய் இருக்கும்?

புரியாத வினாக்களோடு நான் .........

இந்நினைவுகளுக்கு விடை தெரிய கூடுமோ இல்லையோ! உனது முகம் என் முன்னே வந்து சென்று கொண்டிருக்கிறது இவைகளுக்கு விடை தெரிய கூடும் என்ற செய்தியை பறை சாற்றி கொண்டு........................